Sleepper cells remove from ADMK

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், சசியோடு சண்டை போட்டுக்கொண்டு தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக செயல்பட்டு வந்த பன்னீர் எடப்பாடி அணியில் இணைந்ததும் பல்வேறு பதவிகளை பறித்து வைத்து ஆட்டத்தை தொடங்கியுள்ளார். நேற்று முன் தினம் செங்கோட்டையனின் அவை முன்னவர் பதவி, இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட மன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் பதவி எடப்பாடியார் பன்னீரின் இந்த பதவி பறிப்பு ஸ்லீப்பர் செல்ஸ் களையெடுப்பு என அதிமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது.

 கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் சமரசமடைந்து ஒன்றிணைந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு தற்போது வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் 8ஆம் தேதி கூடவுள்ளதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் அமைச்சர் செங்கோட்டையன் வசம் இருந்த அவை முன்னவர் பதவியை பறித்து பன்னீருக்கு கொடுத்தார் எடப்பாடியார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுசூதனன், பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றதால், அதிமுக அவைத் தலைவர் பதவி செங்கோட்டையனுக்கு தந்தார் சசிகலா. அணிகள் இணைவுக்குப் பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் நியமனம் செல்லாது எனவும், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பொறுப்பில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் செங்கோட்டையன் வசம் இருந்த அவைத்தலைவர் பதவி பறிபோனது. அணிகள் இணைவுக்குப் பிறகு செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு கை மாறியது. செங்கோட்டையனுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலோ அல்லது ஆட்சிமன்றக் குழுவிலோ பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்தமாக பறித்து விட்டு டம்மியாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவரை தொடர்ந்து தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட மன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, டிடிவி தினகரன் தரப்பு ஸ்லிப்பர் செல் லிஸ்ட்டில் செல்லூர் ராஜுவும் இருப்பதாக கூறப்படுகிறது. செல்லூர் ராஜுவும் தினகரனை விட்டுக்கொடுக்காமல் தான் பேசி வந்தார். பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்ற போது செல்லூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தன்னை அவமதித்தாக அவரே குற்றச்சாட்டும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடியார் பன்னீருக்காக பதவிகளை பறிப்பது எதற்காக ? ஸ்லீப்பர் செல்ஸ் லிஸ்டில் இருப்பது செங்கோட்டையும், செல்லூர் ராஜூவும் இருக்கிறார்களா என அதிமுகவினர் பேசிவருகின்றனர்.