Sleeper cells have begun to emerge C.R.. Saraswati

செல்லூர் ராஜு மனசாட்சிப்படி பேசியிருப்பதாகவும், தற்போது ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனைக் காண சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா.

பரோலில் வந்துள்ள அவரை அமைச்சர்கள் சிலரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், சிறை நிர்வாகம் விதித்த கடுமையான நிபந்தனைகளை அடுத்து, சசிகலா யாரையும் சந்திக்க மடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் என்று கூறினார். அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு குறித்து சி.ஆர். சரஸ்வதி, தனது மனசாட்சிப்படி சசிகலா குறித்து செல்லூர் ராஜு பேசியிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தற்போதுதான் ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்கள் வெளிவரத தொடங்கியுள்ளதாகவும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.