sivasena critisice bjp

விமர்சனங்களை பொறுக்க முடியாத பாஜக…. விளாசித் தள்ளும் சிவசேனா !!!

சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் விமர்சனங்களை பாஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதன் கூட்டணி கட்சியான சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கி வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை அவமானப்படுத்தக்கூடாது என்பதும், மக்கள் எதிர்மறைக் கருத்துக்களை கூறக்கூடாது என்பதும் பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலை தளங்களில், தங்களைப் பற்றிய விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் பாஜக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாஜகவின் இந்த நிலைப்பாடு எங்கே போனது என அந்த பத்திரிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பொய்த்துப் போனதால்இளைஞர்கள் சமுக வலைதளங்களில்கிண்டல் செய்து விமர்சிக்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவையோ, அதன் அரசையோ விமர்சனம் செய்யும் கருத்து சுதந்திரம் மக்களுக்கு உள்ளதா ? இல்லையா ? என்பதை மக்களுக்கு மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று சாம்னா தெரிவித்துள்ளது.