Asianet News TamilAsianet News Tamil

எம்பிக்களை மட்டும் கொரோனா பாதிக்காதா...? மோடியை மோசமாக விமர்சித்த சிவசேனா..!!

கொரோனாவை  கட்டுப்படுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மூடியுள்ளார்.  

sivasena ask question prime minister modi regarding parliament session
Author
Chennai, First Published Mar 20, 2020, 3:58 PM IST

மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என சொல்லும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது  ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது . கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது ,  இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மக்களே முன்வந்து  தாங்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை  வைத்துள்ளார் .  இந்நிலையில் சிவசேனா ,  மக்களை  தனிமைப்படுத்த வேண்டும் எனச் சொல்லும் பிரதமர் மோடி  நாடாளுமன்றத்தை  மட்டும் நடத்துவது ஏன் விமர்சித்துள்ளது . 

sivasena ask question prime minister modi regarding parliament session

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இதுவரை இந்த வைரசுக்கு 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார்  2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.   சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதுவரை நான்கு பேர் இந்தியாவில் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் .  இதனால் இந்தியாவில் பதற்றம்  தொற்றிக் கொண்டுள்ளது .  எனவே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி வருகிற 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் .  இந்நிலையில்  இதை விமர்சித்துள்ள சிவசேனா அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது . 

sivasena ask question prime minister modi regarding parliament session

அதில் ,  கொரோனாவை  கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கூறுகிறார் .  அரசுப் பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் .  ஆனால் மற்றொருபுறம்  அவர் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்துகிறார் . கொரோனாவை  கட்டுப்படுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மூடியுள்ளார்.   ஆனால் டெல்லியில் நிலைமை அப்படி இல்லை ,  பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் எம்பிக்கள்  அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டியிருக்கிறது . கொரோனா  பரவலை தடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்றக் கூட்டத்தை தள்ளி வைத்திருக்க வேண்டும் என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .  

Follow Us:
Download App:
  • android
  • ios