ஆர்.என். ரவி, குஷ்புவை ஆபாசமாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.! திமுகவில் மீண்டும் இணைப்பு
தமிழக ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவை ஆபாசமாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது செயல்பாட்டிற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதையடுத்து மீண்டும் திமுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்துத் தரக்குறைவான முறையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியிருந்தார். அவரின் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகாரளிக்கப்பட்டது. அதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது
இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்டதையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து திமுகவின் இணைத்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதணையடுத்து மீண்டும் திமுக கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு எதிர்கட்சிகளை விமர்சித்து பேசினார். இந்த சூழ்நிலையல் கடந்த ஜூலை மாதம் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையில் சிக்கினார்.
கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக இந்த முறை அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்திருந்தனர்.
திமுகவில் மீண்டும் இணைப்பு
பல முறை நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு முறையிட்டு இருந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. பல கட்ட முயற்சிக்கு பிறகு ஜாமின் கிடைத்தது. இதனை தொடர்ந்து சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்திருந்தார் இதனை ஏற்று அவர் மீததான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க காரணம் என்ன,? பாஜகவின் திட்டம் இது தான்.! தயாநிதிமாறன் அதிரடி