ஜெஎன்யூ மாணவியின் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக நடிகை தீபிகா படுகோனின் படத்தைப் புறக்கணிக்க  வேண்டும் என்பது தவறு என்றும் நாட்டை  தாலிபன் பாணியில் நடத்த முடியாது என்றும்   சிவசேனா எம்.பி கொந்தளித்துள்ளார் .  கடந்த வாரம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கியது .  அதில் மாணவர்கள் சங்க  தலைவி அய்ஷ் கோஷ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக காயமடைந்தனர். 

 

தாக்குதலை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  மாணவர்களை நேரில் சந்தித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவர்களின்  தாக்குதலை கண்டித்ததுடன்.  ஆதரவு தெரிவித்தார் அத்துடன் நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர் ,  நாட்டை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என்றார் ,  இது வலதுசாரி மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதனையடுத்து  தீபிகா படுகோனுக்கு   எதிர்ப்பு தெரிவித்த வலதுசாரி அமைப்புகள்,  நடிகை தீபிகா நடித்த ஷபாக்  திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர் . 

இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம் பியும்,  சாம்னா பத்திரிகையின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவர் நடித்த ஷபாக் திரைப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர் .  ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட  முக்கியமான படம் அது அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது தவறு.  நாட்டை தாலிபன்கள் பாணியில் ஏற்க முடியாது என்று அவர் கூறினார் .