கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர்  எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ராகுல் காந்தி சிறந்த உதாரணமாக உள்ளார் என சிவசேனா கட்சி அவரைப் பாராட்டி உள்ளது .  அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் ராகுல்காந்தியை பாராட்டி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது .   கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது ,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17615 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை நாடு முழுவதும் 559 பேர் உயிரிழந்துள்ளனர் ,  2254 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,  இந்நிலையில் சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை ராகுல்காந்தியை  மிக வெளிப்படையான பாராட்டியுள்ளது .  

அதில் , ஒரு பொறுப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் எப்படி செயல்பட வேண்டுமோ அந்த விதத்தில் ராகுல்காந்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார் . ஆனால் ராகுலை தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதிலும்,  அவரின் புகழை  கலங்க படுத்துவதிலும் பாஜக குறியாக உள்ளது என்றும் சாம்னா தலையங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது .  ராகுலைப் பற்றி நிறைய எதிர்மறையான கருத்துக்கள் இருக்கலாம் ,  ஏன் அதே கருத்து அமித்ஷா மற்றும் மோடியின்  மீதும் கூட உள்ளது .  ஆனால் நம் நாடு நெருக்கடியில் சிக்குவதற்கு முன்பாகவே அவர் பலமுறை எச்சரித்தார்,  அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும்  ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்  ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மத்திய பிரதேசத்தில்  ஆட்சியை பறிப்பதிலேயே கவனமாக இருந்தனர்  .

அதுமட்டுமின்றி பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  , தற்போதைக்கு இது சண்டைபோடும் நேரமல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் எனவே ஒன்றுபட்டு போராடினால்தான் கொரோனாவில்  இருந்து நாம் விடுபட முடியும் என மீண்டும் பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார் . அது பாராட்டுக்குறியது ,  எனவே நாட்டின் நலன் கருதி கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் ஒரு முறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என சாம்னா கேட்டுக்கொண்டுள்ளது . அதுமட்டுமின்றி ராகுல்காந்தி வைரஸின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனவும் நாட்டில் உள்ள மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் எனவும்  பலமுறை வலியுறுத்தினார் .  ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார் என சாம்னா ராகுலை பாராட்டி தள்ளியுள்ளது .