Since the birthday of Chinnamma Diwakaran the brother grew up together
அக்காவை திட்டாத தம்பி இந்த உலகில் உண்டா என தினகரனுக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூளில் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே தினகரன், திவாகரன், ஜெயனாந்த் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக மோதலை உருவாக்கியுள்ளனர்.
தினகரன் நேரடியாக பதிலடி கொடுக்காமல் அவரது ஆதரவாளரான வெற்றிவேலை உசுப்பிவிட்டு திவாகரன் குடும்பத்தை திட்டி வந்த நிலையில், இன்று திவாகரனுக்கு சசிகலா மீதுதான் கோபம். அந்த கோபத்தை என் மீது வெளிப்படுத்துக்கிறார். இதே திவாகரன் சசிகலாவை எப்படிப் பேசினனர் என்பது எனக்கு தெரியும். சொந்த அக்காவை இதுவரை சசிகலாவை பெங்களூரு சிறைக்குச் சென்று பார்க்காதவர் தான் இந்த திவாகரன். சசிகலாவின் சகோதரர் என்பதைத் தாண்டி கட்சிக்கும் திவாகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பகிரங்கமாக பேட்டியளித்த நிலையில், ஜெயானந்த் இன்று மீண்டும் ஒரு ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார்.

அதில், சின்னம்மா திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர்....ஒன்றாக வளர்ந்தவர்கள்...அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது...இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கரவம்கட்டுவது ஏனோ? என போட்டுள்ளார்.

தனது அடுத்த பதிவில், அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஒரு chapter உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு. நான் கேட்கும் கேள்வி :- கழகத் தொண்டனாய் செயல் பட்ட ஒரு சிலருக்கு சின்னம்மா குடும்பம் என்ற பட்டத்தை தலையில் கட்டி , குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்க காரணம் என்ன? எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை சொல்லி ஒன்னும் ஆகாது தூண்டுபவர்களை சொல்ல வேண்டும் என தினகரனை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

கடைசியாக, எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் TTV யுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவனைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார். அவர் என்ன சிறுவனா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
