எளிய முதல்வர் என்று கூகுளில் தேடினால் எடப்பாடி பழனிச்சாமி பெயர் தான் வரும் என்று அமைச்சர் உதயக்குமார் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

T>Balamurukan
எளிய முதல்வர் என்று கூகுளில் தேடினால் எடப்பாடி பழனிச்சாமி பெயர் தான் வரும் என்று அமைச்சர் உதயக்குமார் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசும்பொழுது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தொண்டர்கள் போன்று நாட்டில் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை.முதலமைச்சர் பழனிசாமி பதவியேற்றபொழுது, இந்த ஆட்சி ஒரு வாரமே நிலைத்திருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறியிருந்தது. ஆனால் அதனை தகர்த்தெறிந்து, இந்தியாவுக்கு வழிகாட்டியாக அவர் திகழ்ந்து வருகிறார்.

இந்திய அளவில் தமிழகம் சிறந்த முறையில் ஆட்சி செய்கிறது. கூகுளில் எளிய முதல்வர் என தேடினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரே வரும். தமிழக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதை ஏற்று கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை. இனி வரக்கூடிய எந்த தேர்தலாக இருப்பினும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.