சித்து ஒரு தேசவிரோதி, ஆபத்தானவர். அவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடுமையாக போராடுவேன். அடுத்த ஆண்டு நடக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வேன். அதுவரை அவருக்க எதிரான போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பேன் என பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆவேசமாக கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. பூசல் நிலவியது. இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்;- வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு வேறு யாரையாவது முதல்வராக நியமித்து கொள்ளலாம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் கட்சித் தலைமை கேட்கவில்லை. இதனால் மிகவும் அவமானமடைந்து பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. நான் கூறியதை யாரும் கேட்காததால் காயப்பட்டேன். அதனால், இப்போது அதற்கு எதிராக போராடுவேன்.

எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள். அனுபவம் இல்லாததால் அவர்களுடன் இருக்கும் தலைவர்கள் அவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். மேலும், சித்து ஒரு தேசவிரோதி, ஆபத்தானவர். அவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடுமையாக போராடுவேன். அடுத்த ஆண்டு நடக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வேன். அதுவரை அவருக்க எதிரான போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
