காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். 

தற்போது மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக, ஆன்மீக மையமாக மாறியுள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் 1980-களுக்கு முன்பு மிக மிக சாதாரணமாக இருந்தது.  அதன்பின் இந்த ஆலயத்தின் புகழ் வேகமாக  பரவவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து. இங்கு தனி ரயில்நிலையம், கல்லூரிகள் என பலதரப்பட்ட வகையிலும் இப்பகுதி பிரபலமடைந்துள்ளது.

அரசியல் தலைவர்களுடன் தொடர்புடையவர்  பங்காரு அடிகளார். இவரது இலவச மருத்துவ முகாம் நடத்துவதால் பலர் பலனடைந்துள்ளனர். ஆன்மீக குருவான பங்காரு அடிகளாருக்கு தற்போது பத்மஸ்ரீ விருதி அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பிஜேபி அரசு திட்டமிட்டு ஆன்மீகவாதிகளுக்கு உயரிய விருதினை அளிக்கிறது என பலதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சென்னை தி நகரில் பிஜேபி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, மருத்துவ சேவை உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருவதன் அடிபடையிலேயே பங்காரு அடிகளாருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். விருது கொடுத்தது சரியா, தவறா என அங்கு வரும் பெண்களை கேட்டால்  சொல்வார்கள்  எனக் கூறிய தமிழிசை தகுதியானவர்களுக்கு தான் மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதுகள் கொடுத்து உள்ளது என்றார்.