குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் சில அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து கர்நாடகா போலீசார் பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இன்று  நடந்த போராட்டத்தில் பிரபல வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கலந்து கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது, பெங்களூருவில் எந்த முன்னறிவிப்பின்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் நாட்டை துண்டாட நினைக்கின்றனர் என்று குஹா தெரிவித்திருந்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ( 20 ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே மங்களூருவில் நடைபெற்ற  போராட்டத்தின் போது பயங்கர வன்முறை வெடித்தது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்   பொதுமக்கள் இரண்டு பேர் பலியாயினர். 

மேலும் அரசுக்கு சொந்தமான பஸ்கள் மீதும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து்ளது. கல்வீச்சு சம்பவத்தில்  போலீசாரும். பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.