Asianet News TamilAsianet News Tamil

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி... இனி டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி எழுதினாலும் பப்பு வேகாது... முக்கிய உத்தரவு!

 மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றுமின்றி, இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சுப்ரீம் கோர்ட் ஒரே தீர்வைதான் வழங்கியுள்ளது.

Shock to government employees ... Even if you write TNPSC and TRP,  will not cook ... Important order
Author
Tamil Nadu, First Published Oct 2, 2021, 4:22 PM IST

மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  மீண்டும் உத்தரவிட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி மற்றும் டி.ஆர்.பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை எதிர்த்து, டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Shock to government employees ... Even if you write TNPSC and TRP,  will not cook ... Important order

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சரீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. 

பின்னர். கடந்த 2016ம் ஆண்டு புதியதாக சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். Shock to government employees ... Even if you write TNPSC and TRP,  will not cook ... Important order

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமேயன்றி, இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’ என்று கடந்த 2019-ல் தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். Shock to government employees ... Even if you write TNPSC and TRP,  will not cook ... Important order

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ‘ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றுமின்றி, இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சுப்ரீம் கோர்ட் ஒரே தீர்வைதான் வழங்கியுள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் வரும் 12 வாரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. 

 இதன் மூலம் மதிப்பெண் அடிப்படையில்தான் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios