shivsena broken alliance with bjp
பாஜகவுடனான 29 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா கட்சி முறித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 29 ஆண்டுகளாக பாஜக-சிவசேனா கூட்டணி இருந்து வந்தது. தற்போதும் கூட மத்திய அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. மகாராஷ்டிராவிலும் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், அண்மை காலமாக மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசின் முடிவை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக சிவசேனா அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் சிவசேனா தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதன்மூலம் 29 ஆண்டுகால பாஜக-சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்தது.
