7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை தொகுதி, தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கே சாதகமாக அமைந்துள்ளது. ஏற்கனவே EXIT POLL கருத்து கணிப்பு வெளியான போது , காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் இது மக்களின் கருத்தாக இருக்க வாய்ப்பில்லை என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது, உண்மை தெரியவரும் என கூறி வந்தனர்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் பாஜக கட்சியினருகே சாதகமாக இருக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி 3 லட்சத்தி 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், வாரணாசி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து பேசியுள்ள, காங்கிரஸ் கட்சியின் மஹாராஷ்டிர எம்.பி., சரத் பவார், மோடியின் வெற்றி மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களின் முடிவை ஏற்று கொண்டாலும், மக்களுக்கு வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதாக புது குண்டை போட்டுள்ளார். இதற்கு பாஜக கட்சியினர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.