தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, பின் மருத்துவமனையில் இறந்து போன 19 வயது தலித் பெண் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  ராகுல் காந்தியை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில்.., "தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை. அவர்களுக்காக, முதல்வரும், அவரது காவல் துறையும் யாரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று சொல்கிறது. பல இந்தியர்களுக்கு, அவள் யாரும் (ஒரு பொருட்டு) இல்லை என பதிவு செய்து இருந்தார்.