Serve and become chief minister Sarath Kumar comment on Kamal politics
நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதால் அரசியல் என்ன என்பது தெரியும் என சமத்துக மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் கமல், அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார். அண்மை காலமாக தனது டுவிட்டர் பக்கத்தில் சமூகம் சார்ந்த விஷயங்களும், அரசியல் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
தமிழகத்தில் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை தனியாகவே சந்திக்கப்போவதாக அவர் கூறியிருந்தர். அரசியலில் ஈடுபடப்போவது குறித்து தெளிவான கருத்துக்களை தற்போது முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் அரசியல் என்ன என்பது தெரியும் என்றார். முதலமைச்சராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கூறுபவர்கள், சேவை செய்து விட்டு முதலமைச்சராகலாம் எனவும் சரத்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சருத்து வரவேற்கத்தக்கது என்றாலும் அவரின் பேச்சு பல்வேறு கேள்விகளை எழுப்புவதாஉ ள்ளது என்றும் சரத்குமார் கூறினார்.
