அவங்களை எங்களோடு ஒப்பிடாதீங்க… பாஜகவை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி!!
நோட்டா உடன் போட்டியிடுபவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாஜகவை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.
நோட்டா உடன் போட்டியிடுபவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாஜகவை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை கோவைக்கு வருகை தர உள்ள முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஓவரா ஆட்டம் போடும் சவுக்கு சங்கர்.. உயர் நீதி மன்றம் அடித்த ஆப்பு.. அமைச்சர் செய்தில் பாலாஜி குறித்து பேச தடை.
போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார துறையில் தமிழ்நாட்டிற்குக் கடந்த சில காலமாகவே பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டண விலையைக் குறைப்பது தொடர்பாகச் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். முதல்வரின் உத்தரவின்படி, மின்சார துறை அதற்கான பரிசீலனையை மேற்கொண்டது.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்த மு. கருணாநிதி; LGBTQIAவுக்கு பால்புதுமையினர் என அகராதி வெளியிட்ட ஸ்டாலின்
பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்துள்ள ஒழுங்கு முறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும். நோட்டா உடன் போட்டியிடுபவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் கோவையில் எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. அந்த நிலையில் இருக்கும் அவர்களை திமுக உடன் ஒப்பிடுவது தவறு. தமிழகத்தில் இல்லாத அவர்களை இருக்கின்றது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.