- Home
- Tamil Nadu News
- Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் திருமணங்கள் நடக்குது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத்து மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்னு விஜய் சொல்லியுள்ள நிலையில், இது எப்போ கிடைக்குமுன்னு பார்ப்போம்.

தங்க மோதிரம், பட்டுப்புடவை ரெடியா?
தமிழ்நாட்டு அரசியல்னாலே பிரம்மாண்டமான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்குப் பெயர் போனது. ஆனா, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) அளித்த வாக்குறுதிபடி வீட்ல புதுசா ஒரு குழந்தை பிறந்தா, அரசாங்கமே தங்க மோதிரம் போடுமாம். பொண்ணுக்கு கல்யாணம்னா, 8 கிராம் தங்கம், பட்டுப் புடவைன்னு அரசாங்கமே சீர் செய்யுமாம். கேட்கவே கனவு மாதிரி இருக்குல்ல? இது எப்போதிலிருந்து நடக்கும் தெரியுமா?
கஜானா காணாமல் போகும்
விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றனும்னா, மாநில அரசு கஜானாவுக்கு வருஷத்துக்கு 3,300 கோடி ரூபாய்க்கு மேல சுமை ஏற்படும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.76 கோடி. இங்க எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், அதுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படும். புள்ளிவிவரப்படி, நாட்டிலேயே குறைவான பிறப்பு விகிதம் இங்கதான் இருக்கு. 2025-க்குள் சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் பிறக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
தங்க மோதிரம் திட்டத்துக்கு 235 கோடி ரூபாய் தேவை
இந்த வாக்குறுதி ரொம்ப முக்கியம்
3,070 கோடி ரூபாய் செலவாகும்
மாநிலத்தில் வருமானப் பங்கீடு சமமா இல்லாததால, சுமார் 60% குடும்பங்கள் இந்த உதவிக்கு தகுதி பெறலாம்னு கணிக்கப்படுது. அதாவது, வருஷத்துக்கு சுமார் 2,70,000 மணப்பெண்கள் இந்த தங்கத்தைப் பெற தகுதியுடையவர்கள். 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,835 ரூபாய். அப்போ, ஒரு மணப்பெண்ணுக்கு கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டுமே சுமார் 1,10,680 ரூபாய். இதோட 3,000 ரூபாய் மதிப்புள்ள புடவை செலவையும் சேர்த்தா, ஒரு மணப்பெண்ணுக்கு அரசாங்கத்தோட செலவு 1,13,680 ரூபாயைத் தாண்டும். இப்போ, தகுதியுள்ள எல்லா மணப்பெண்களுக்கும் கணக்குப் போட்டா, இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே அரசு கஜானாவில் இருந்து சுமார் 3,070 கோடி ரூபாய் செலவாகும்.
"விஜய் அரசை அசைக்க முடியாது"
பிறந்த குழந்தைகளுக்கான மோதிரம், மணப்பெண்களுக்கான தங்கம்னு இந்த ரெண்டு செலவையும் சேர்த்தா, விஜய்யின் அரசாங்கம் இந்த ரெண்டு திட்டங்களுக்கு மட்டுமே வருஷத்துக்கு 3,300 கோடியிலிருந்து 4,000 கோடி ரூபாய் வரை ஒதுக்க வேண்டியிருக்கும். தங்கத்தின் விலை நிலையாக இருக்கும்னு வெச்சுதான் இந்தக் கணக்கு. ஆனா, கடந்த ரெண்டு வருஷத்துல தங்கம் விலை ராக்கெட் வேகத்துல ஏறியிருக்கு. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. பட்ஜெட் ரொம்ப கையை கடிக்கும் என்பதால் இந்த திட்டத்தில் சில கண்டிஷன்களை சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வாக்குறுதியை கடைசியா வச்சுக்கலாமுன்னும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை சொல்லி இருக்காங்க. ஆனா இந்த திட்டத்தை மட்டும் செயல்படுத்திட்ட விஜய் அரசை அசைக்க முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

