அமமுக தினகரனுக்கு அல்வா கொடுத்துவிட்டு அப்படியே தனது படையோடு  திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி. அடுத்த பதினைந்தே நாட்களில் கரூரில் பிரமாண்ட மாநாடு நடத்தி ஸ்டாலினையே மிரள வைத்தார். அடுத்த 40 நாட்களில் திமுகவின் கரூர் மாவட்டப் முக்கிய புள்ளியான நன்னியூர் ராஜேந்திரன் பதவியை வாங்கி கரூர் திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி.

மாவட்டத்தில் பதவிக்கு வாங்கிய உடனேயே  தான் யார் எனக்  காட்டும் வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஜனவரி 27ஆம் தேதியே அட்ச்சி தூக்கி அதகளம் செய்ய  பிளான் போட்டுள்ளாராம் செந்தில்பாலாஜி.

இப்படி  செந்தில் பாலாஜியின் அதகாலத்தை தொடங்கும் முன்பே  கரூர் மாவட்ட திமுகவின் பழைய ஜாம்பவான்கள் கதி கலங்கிப் போய்தான் இருக்கிறார்கள். ஆமாம், செந்தில் பாலாஜி திமுகவிற்கு வந்ததிலிருந்தே அல்லு விட்டு உட்கார்ந்த்துள்ளார்களாம் அந்த மாஜிக்கள்.

அதிமுகவுல விஜயபாஸ்கர் உட்பட அவரோட எதிரிகளை எப்படி ஓரங்கட்டினார்னு தெரியும். நம்மளுக்கும் அதே நிலைமை வந்துடக் கூடாதுன்னா செந்தில் பாலாஜிக்கு தம்பி துறைக்கு எதிராக  எம்.பி சீட் வாங்கி கொடுத்து ஜெயிக்க வச்சு டெல்லிக்கு அனுப்பிடனும். லோக்கல் அரசியலில் விடக்கூடாதுன்னு பக்கா ஸ்கெட்ச் போட்டு வருகிறார்களாம்.

ஆனால், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களோ அண்ணனுக்கு எதிரின்னு யாருமே இல்ல.அண்ணன் திமுகவிற்கு வந்தது பிடிக்காமல் யாராவது எதிராக ஸ்கெட்ச் போடலாம், அண்ணனைப் பொறுத்தவரை அவரது டார்கெட் டெல்லி இல்ல. அண்ணனுக்கு எப்பவுமே லோக்கல் பாலிடிக்ஸ்ல தான் இன்ட்ரஸ்ட்,  அதேபோல தலைமைக்கு டைரக்ட் லிங்க் இருக்கணும்னு நெனைப்பாரு. தலைவர் எம்.பி. தேர்தலில் யாரை  வேட்பாளரை நிறுத்துறாரோ அவரையே வெற்றிபெற வைப்பார். அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ ஆவார். அமைச்சராக கூட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.