Asianet News TamilAsianet News Tamil

தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு !! நீங்க எம்.பி.சீட் மட்டும் வாங்குங்க..சின்னசாமிக்கு கொம்பு சீவிய செந்தில் பாலாஜி!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் உங்களை ஜெயிக்க வைத்து தம்பித்துரையை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என்று கரூர் சின்னசாமியுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட் போட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

senthil balaji ready to give tough to thambidurai
Author
Karur, First Published Dec 14, 2018, 10:08 AM IST

முன்னாள் அமைச்சரும் டி.டி.வி.தினகரனின் வலது கரமாகவும் செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. இவர் திடீரென அமமுகவில் இருந்து விலகி இனறு ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். இதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

senthil balaji ready to give tough to thambidurai

 

செந்தில் பாலாஜியை திமுகவுக்கு போக விடாமல் தடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தஞ்சை ரெங்கசாமி  உள்ளிட்ட பலர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை.

 

இதனிடையே தன்னை திமுகவுக்க அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமியிடம் , செந்தில் பாலாஜி சில ஜென்டில்மேன் அக்ரிமென்ட்களைப்  போட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

senthil balaji ready to give tough to thambidurai

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு பரம எதிரியாக செயல்பட்டு வந்தவர் கரூர் சின்னசாமி.  கடந்த  2000-ஆம் ஆண்டில்  தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி  வந்தபோது அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தார் கரூர் சின்னசாமி.

 

ஆனால், செந்தில்பாலாஜியின் நெருக்கடி தாங்க முடியாமல்தான் தி.மு.க-வுக்குப் போனார் சின்னசாமி. ஆனால், தன்னை காலை வாரிய அதே செந்தில்பாலாஜிக்கு அரசியல் வாழ்க்கை கொடுக்க இப்போது தி.மு.க-வுக்கு அழைத்துப்போக இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.

senthil balaji ready to give tough to thambidurai

இந்நிலையில் கடந்த மக்களவைத்  தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரைக்கு செந்தில் பாலாஜி பெரும் ஆதரவாக இருந்து செயல்பட்டார். ஆனால் அவர் எம்.பி. யாக ஜெயித்து முடித்தவுடன் செந்தில் பாலாஜியை மதிக்கவில்லை என்று அவர் நினைத்தார்.

 

அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவியையும் தம்பிதுரை பறிக்க காரணமாக இருந்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் தனது எதிரியான எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கும் அமைச்சர் பதவி வாங்கித் தந்தார்.

senthil balaji ready to give tough to thambidurai

அதற்குப் பழிவாங்கவே இப்போது வரும் எம்.பி தேர்தலில் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைத்து, கரூர் சின்னசாமியை ஜெயிக்க வைப்பதாக சபதம் போட்டுள்ளார் செந்தில்பாலாஜி.

Follow Us:
Download App:
  • android
  • ios