கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து டிடிவி தினகரன் சறுக்கலை சந்தி்த்து வருகிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, மூக்குப்பொடி சாமியார் மறைவு மற்றும் டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த செந்தில்பாலாஜி திமுக அணியில் சேருவது போன்ற சம்பவங்களால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதீங்க என தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் டிடிவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு பட்டிருந்த அதிமுக அணி ஒன்றாக சேர்ந்தது. பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றத்திற்கு பிறகு டிடிவி தலைமையில் புதிய கட்சி தொடங்கினார். பிறகு ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி பெற்று அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தார். மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் துணையோடு தமிழகம் முழுவதும் தொடர் பொதுகூட்டம் நடத்திக் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் தினகரன் கடந்த சில நாட்களாக  நீண்ட அமைதியில் இருந்து வருகிறார். இதில் மூக்குப்பொடி சாமியார் மறைவு மற்றும் மிக முக்கியமாக செந்தில்பாலாஜி தி.மு.க. செல்கிறார் என்கிற தகவல் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுயிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அமைதி அவருடைய கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஆண்டு டிடிவி தினகரன் தனது 54-வது பிறந்தநாளில் அவர், திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்து விட்டு திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். பின்பு நேராக. ஆர்.கே.நகர் பிரச்சாரத்தின்போது, மக்களோடு மக்களாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். 

இந்நிலையில் இந்த வருடம் இன்று தினகரனின் 55-வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் உள்ள தன் மாவட்ட செயலாளர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த முறை என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே கூடாது என மிகவும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். காரணம் எதையும் சொல்லாமல் இப்படி பிறந்த நாள் கொண்டாட கூடாது என்று சொல்லியிருப்பது இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தினகரனுக்கு பிறந்தநாளில் அதிர்ச்சி தரவேண்டும் என்று எண்ணி செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைவது குறிப்பிடத்தக்கது.