செந்தில்பாலாஜி, திமுகவில் இணைவதை டி.டி.வி.தினகரன் அணியினர் மட்டுமல்ல திவாகரன் தரப்பும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் விரக்தியடைந்துள்ள திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் அதனை வெளிப்படுத்தியுள்ளார். 

டி.டி.வி.தினகரனின் ஆதிக்கம் பொறுக்காமல் அவரை எதிர்த்து அண்ணா திராவிடர் கழகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார் திவாகரன். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் அவ்வப்போது ஒருவரியொருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். சசிகலா சிறையில் இருப்பதால் இவர்களது பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்த செந்தில் பாலாஜி இணைவது தொடர்பான செய்திகள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இது டி.டி..வி.தினகரனை மட்டுமல்ல , ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், ’செந்தில் பாலாஜியை நினைத்தால் எனக்கு ஒன்று தோன்றுகிறது.. ஓடுனவனுக்கு ஒன்பதுல குரு அம்புட்டவனுக்கு அஷ்டமத்துல சனி’ என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.