Asianet News TamilAsianet News Tamil

ஆட்சி மாறுச்சுனா முதல் அரெஸ்ட் இவர் தான்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி!!

கரூர் எம்.பி. பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

senthil balaji is the first arrest when regime changes says annamala
Author
Coimbatore, First Published Jun 16, 2022, 7:42 PM IST

கரூர் எம்.பி. பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கோவை மசக்காளிபாளையத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளை கெளரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக 5 கோடியே 50 லட்சம் கழிப்பறைகள் தான் இந்தியாவில் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 8 ஆண்டு கால ஆட்சியில் 11 கோடியே 23 லட்சம் பேருக்கு கழிப்பறைகள் கட்டி தரப்பட்டுள்ளது.

senthil balaji is the first arrest when regime changes says annamala

மேலும் தற்பொழுது மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவிலேயே இல்லை. 67 சதவிகிதம் எல்பிஜி தற்பொழுது 99.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023ல் இந்தியாவின் கடைசி மனிதனுக்குக் கூட வீடு இருக்கும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றனர். மேலும் கேரள மாநில முதல்வர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளி தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் அது குறித்து பேசவில்லை. தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால் இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குண்டர் சட்டம் போடுகின்றனர்.

senthil balaji is the first arrest when regime changes says annamala

தமிழக அரசு காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிப்பதற்கு காவேரி நீர் மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடையாது. 2021 முதல்வர் கூட்டத்தில் Tangedco பிஜிஆருக்குத்தான் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறினாரா இல்லையா? மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர, அரசு மாறும்பொழுது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios