Asianet News TamilAsianet News Tamil

தலைசுற்ற வைக்கும் செந்தில்பாலாஜி கடந்து வந்த பாதைகள்...!

கரூரை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இவர், அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்பாலாஜி, திமுகவில் இணைய உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

Senthil balaji Background information
Author
Chennai, First Published Dec 13, 2018, 4:23 PM IST

கரூரை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இவர், அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்பாலாஜி, திமுகவில் இணைய உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. Senthil balaji Background information

இந்த நிலையில் தான் விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு இருப்பதைப்போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து திமுகவில் செந்தில்பாலாஜி நாளை இணையப்போவது உறுதியாகிவிட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்த பின்னணி ஒரு பார்வை பார்ப்போம்... செந்தில் பாலாஜி ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான். அவர் அரசியல் பாதையை பார்ப்போம். கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவரது இயற்பெயர் செந்தில்குமார். நியூமராலஜி குமாரை நீக்கிவிட்டு, பாலாஜியை சேர்த்துக்கொண்டார். Senthil balaji Background information

இவர் கல்லூரி பருவத்திலேயே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். முதல் முதலில் தனது அரசியல் பிரவேசத்தை மதிமுகவில் இருந்து தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து 2000-ம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது இளமை பருவ அரசியல் திறமையால் தொடக்கத்தில் மாணவரணி பொறுப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 

 Senthil balaji Background information

தனது அசுர வளர்ச்சி மூலம் 2006-ம் ஆண்டு கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். முக்கியமாக திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வந்தார். 2011-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பு வழங்கினார். பல்வேறு புகார் காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.   

தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பணம் பலத்தால் கரூரில் அசைக்க முடியாதவராக திகழ்ந்து வந்தார். 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். Senthil balaji Background information

பின்னர் ஜெயலலிதா மறைவையடுத்து இரண்டாக பிரிந்தது. இதனையடுத்து தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்த போது அவர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். மேலும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து கடும் மனஉளச்சலில் இருந்து வந்த செந்தில்பாலாஜி நாளை திமுகவில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios