Asianet News TamilAsianet News Tamil

குஷ்பூ பாணியில் பாராட்டித் தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர்... வாயடைத்துப்போன கதர்கட்சி விஐபிகள்..!

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது காங்கிர மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூர் வரவேற்றுள்ளார்.

Senior Congress leader who praised Khushboo style ... VIP shut the mouth
Author
Tamil Nadu, First Published Jul 31, 2020, 3:53 PM IST

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது காங்கிர மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூர் வரவேற்றுள்ளார்.Senior Congress leader who praised Khushboo style ... VIP shut the mouth

குஷ்பு மத்திய அரசு வெளியிட்டக் கல்விக்கொள்கையை வரவேற்பதாக கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதிர்ச்சியின்மையால் குஷ்பு இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் ஏதோ லாபத்தை எதிர்பார்த்து இப்படி பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தான் பாஜகவுக்கு ஆதரவாக பேசவில்லை. எனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே தெரிவித்து இருந்தேன் என மன்னிப்பு கேட்டிருந்தார் குஷ்பு. இந்நிலையில் அதே கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், ’’2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை வரவேற்க நிறைய இருக்கிறது. எங்களில் சிலர் அளித்த பல பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது ஏன் முதலில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் நான் இருந்த நாளில் இருந்து, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு 1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை திருத்தி அமைக்கும்படி பரிந்துரைத்து வந்தேன்.Senior Congress leader who praised Khushboo style ... VIP shut the mouth

மோடி அரசு இதை செய்வதற்கு 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாலும் கூட இதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் சவால் என்னவென்றால் நமது எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வது ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தில் 6% கல்விக்கு செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு கல்விக்கான செலவை குறைத்துள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார். இதற்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம்  எனக் கருதப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios