செந்தில் பாலாஜி திமுகவில் செட்டில் ஆக நேரம் வந்துவிட்டது. செந்தில் பாலாஜி ஆட்களும்  கட்டு சோறு கட்டிக்கொண்டி வண்டிபிடித்து பட்டணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே ஒட்டுமொத்த அதிமுக அமமுக கண்களும் தனது தாய்க் கழகமான அறிவாலயத்தை நோக்கியே  இருக்கிறது.

இப்படி இருக்கையில் , கவுன்சிலராக இருந்த கட்சிக்கே தந்து அரசியல் வாழ்க்கையை அர்ப்பணிக்க அறிவாலயம் வரும் செந்தில் பாலாஜியை, அதிமுக வறுத்தெடுத்து காயப்போட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பரம எதிரியான விஜயபாஸ்கர் 

நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சொன்னேனுங்க, தினகரனையும் கூடவே பதினேழு  எம்.எல்.ஏ.க்களையும் இந்தாளு செந்தில்பாலாஜி நடுத்தெருவில் நிறுத்துவிட்டார்ன்னு. அது என்னைக்கோ உண்மையாகிடுச்சு, இப்போ என்னடான்னா நடுத்தெருவில் அவங்களை நிறுத்திட்டு இவரு வேற கட்சிக்கு தாவுறார். அதுவும் நம் அம்மாவால் ‘நிரந்தர எதிரி’ அப்படின்னு வெறுக்கப்பட்ட தி.மு.க.வுக்கு தாவுறார். அப்படின்னா இவருடைய விசுவாசம் எந்தளவுக்கு இருக்குதுன்னு தெரிஞ்சுக்குங்க. 

பதவிக்காக என்ன வேணா பண்ணுவார். அட தமிழ்நாட்டுல மட்டுமில்லைங்க, ஆந்திராவில் யாராச்சும் இவருக்கு அமைச்சர் பதவி தர்றேன்னு சொன்னால் கூட அங்கேயும் ஓடிப்போயிடுவார். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்களில் தினகரன் கூடாரத்தில் இருந்து எல்லாரும் வெளியேறி, தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணையப்போறாங்க. மொத்தமாக கூடாரம் அங்கே காலியாக போகுது. திரும்பி வரும் அத்தனை பேருக்கும் முழுமையான அன்பும், மரியாதையும் வழங்கப்படும் செந்திலை செம்ம வாங்கு வாங்கியிருக்கிறார்.

இந்த விஷயம் அப்படியே செந்தில் பாலாஜியின் காதுக்கு போக மனுஷன் காட்டு கத்து கத்தினாராம், எந்த விஷயத்தையும் கூலாக டீல் செய்யும் செந்தில், நான் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் வந்த சமயத்தில் கார் கதவை திறந்துவிட்டபடி, கையில் மஞ்சள் பையுடன் அலைந்தவர்தான் அந்த விஜயபாஸ்கர் என்னப்பத்தி இப்படி பேசுறதா? மஞ்சபையை வச்சிக்கிட்டு பின்னாடியே சுத்தி வந்தது, கார் கதவ திறந்துவிட்டது மறந்து போச்சா? இதுவரைக்கும் நான் யாரையும் எதிர்க்கிற எண்ணமே இல்ல ஆன இப்போ என்னோட ஃபஸ்ட்  டார்கெட்டே  விஜயபாஸ்கர் தான். தமிழ் நாட்டுல எந்த தொகுதி போனாலும் உன்னை விட மாட்டேன், உனக்கு எதிரா நிக்கிற திமுக வேட்பாளரை எத்தனை கோடி செலவானாலும் ஜெயிக்க வைப்பேன். உன்ன மண்ணை கவ்வ வைப்பேன். நான் யாருன்னு காட்டுறேன் என சபதம் போட்டிருக்கிறார்.