Asianet News TamilAsianet News Tamil

கண்டுக்காம விட்ட சேவூர் ராமு... செட் போட்ட செல்லூர் ராஜூ... உக்கிரமாக மாறிய மீனாட்சி... ஆட்சிக்கே ஆப்பு!

Sellur Rajus Meenakshi Amman temple and sevur ramachandran is not interested to clean
Sellur Raju's Meenakshi Amman temple and sevur ramachandran is not intrested to clean
Author
First Published Feb 4, 2018, 3:44 PM IST


அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காதுகுத்து விசேஷத்தில் கோவில் கோபுரம் போல போடப்பட்டது அம்மன் கோபத்தை அதிகரித்து விட்டதாக உள்ளூர்வாசிகள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்ல, ‘கோயில்ல தீ அதிகம் பரவியதுக்கு காரணமே உள்ளே கடைகளில் இருந்த நெய்தான். அதுல இருக்கிற கடைகள் பெரும்பாலும் அதிமுக கட்சி காரங்க நடத்துவதால் சேவூர் ராமச்சந்திரன் கண்டுக்காம விட்டதால் வந்த வினை என சொல்கிறார்கள்.

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு நடந்த தீ விபத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செம அப்செட் ஆக்கியிருக்கிறது. தீ விபத்து என்ற தகவல் நேற்று இரவு முதல்வருக்கு சொல்லப்பட்ட போதே, ‘கோயில்ல தீ பிடிக்கிறது நல்லது இல்லையே... அதுவும் தைவெள்ளிக் கிழமையில் தீயா? இது ஆட்சி கவிழ இருப்பதை காட்டுகிறது என சொல்கிறார்கள்.

Sellur Raju's Meenakshi Amman temple and sevur ramachandran is not intrested to clean

கோவிலில் தீப்பிடத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல்வருக்கு வேண்டப்பட்ட ஜோதிடர்கள் அவரை அவசர அவசரமாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஆலயங்களில் இப்படி  தீ என்பது ஹோமம் வளர்க்கும் போதும், தீபம் ஏற்றும் போது மட்டுமே இருக்கணும். இப்படி தானாக பற்றிய எரிவது நல்லதல்ல. madhurai மீனாட்சி கோபத்தின் உச்சத்தில் இருப்பது அந்த தீயில் தெரிந்தது. பொதுவாக கோயிலில் தீப்பற்றினால் அரசனுக்கு ஆபத்து  என்பது அந்தகாலத்திலிருந்து சொல்லப்படும் ஐதீகம்.

அதனால், இப்போது கோயிலில் தீப்பிடித்ததும் நல்லதுக்கு இல்லை. மீனாட்சியின் எல்லையில் தீ என்றால் அதனால் ஆட்சிக்கு ஆபத்து..’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு முதல்வரோ, ‘நடந்திருக்கக் கூடாது. நடந்துடுச்சு. அதற்கு ஜோதிடர்களும் சில பரிகாரங்களை சொல்லி இருக்கிறார்கள். ‘அந்த பரிகாரங்களை உடனடியாக செய்யுங்க...’ என அவர்களிடம் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசினார் முதல்வர். ‘கோயில் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கணும். இப்போ ஆட்சிக்கே ஆபத்து வரும்னு சொல்றாங்க.

Sellur Raju's Meenakshi Amman temple and sevur ramachandran is not intrested to clean

கோயில்ல தீ அதிகம் பரவியதுக்கு காரணமே உள்ளே கடைகளில் இருந்த நெய்தான். அதுல இருக்கிற கடைகள் பெரும்பாலும் அதிமுக கட்சிக் காரங்களுக்கு சொந்தமானது. யாரு என்ன செய்யுறாங்கன்னு அமைச்சரால் கூட கேட்க முடியாத நிலையில் தான் உள்ளதாம்.

இதனால் கடுப்பான முதல்வர், ‘இனி அப்படியெல்லாம் பார்க்க கூடாது.. தப்புன்னா யாரு செஞ்சாலும் அது தப்புதான் அதுவும் கடவுள், ஆலயம் சம்பந்தமான விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்கணுமே என யோசிக்கிறாராம். கோபத்தின் உச்சத்திற்கே சென்ற எடப்படியோ  விதிகளை யார் மீறி எது இருந்தாலும் நடவடிக்கை எடுத்தே ஆகணும்... அது நம்ம ஆட்களாக இருந்தாலும்’ என கொந்தளிதாராம்.

இன்னொரு விஷயமும் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருந்த சசிகலாவும் இளவரசியும் கோயிலில் சில விதிகள் மீரப்பட்டதாம். ஆனால், அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் அதை மூடி மறைத்துவிட்டார்கள்.  இந்த தீக்கு இதுவும் காரணம் என சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த வாரம் மதுரை  பாண்டி கோவில் பகுதியில் காது குத்து விழா நடந்தது.
 

Sellur Raju's Meenakshi Amman temple and sevur ramachandran is not intrested to clean

இந்த விழாவுக்காக மீனாட்சி அம்மன் கோவில் கோபுர முகப்பு போல செட் போடப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட அந்த விழாவின் அழைப்பிதழ் வீடியோ வடிவில் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்திருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றனர். லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். ஆகம விதிப்படி கோவில் கோபுரம் போலவோ, கோபுரத்தை விட உயரமாகவோ எந்த கட்டிடமோ இருக்கக் கூடாது. ஆனால், அமைச்சரோ வீட்டு விசேஷத்தில் கோவில் கோபுரம் போல போடப்பட்டது அம்மன் கோபத்தை அதிகரித்து விட்டதாக உள்ளூர்வாசிகள் கூறி வருகின்றனர். இது இப்படியிருக்க எடப்பாடியாரோ ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆன்மீகப் பெரியவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Follow Us:
Download App:
  • android
  • ios