திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதை மக்களிடம் சேர்த்தது திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி. எனவே தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பணி மிகவும் முக்கியமானது. திமுகவின் தில்லு முல்லுகளை தகவல்தொழில் நுட்ப அணியினர் பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும்.

கட்சித் தலைவரின் மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதை தருகின்றார்கள். நிர்வாகத் திறமை இல்லாதவர். நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது என முன்னாள் அமைச்சரும் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில்;- திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதை மக்களிடம் சேர்த்தது திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி. எனவே தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பணி மிகவும் முக்கியமானது. திமுகவின் தில்லு முல்லுகளை தகவல்தொழில் நுட்ப அணியினர் பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும்.

அதிமுக 2 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது. உள்ளாட்சித் தோ்தலில் முடிந்தளவு நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். கட்சியின் விருப்பம் மட்டுமின்றி மக்களின் விருப்பப்படியும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது மூன்றாவது தலைமுறை வந்து விட்டது. அடுத்து இந்த கட்சியை வழிநடத்தி, தலைமை தாங்கி நடத்தப்போவது நீங்கள் தான். நாங்கள் ரிட்டையர் ஆயிருவோம். இன்னும் எவ்ளோ நாள் இருக்கப்போகிறோம். எங்களுக்குப் பிறகு நீங்கள் தான் கட்சியை வழி நடத்த போகிறீர்கள்.

பொறுமையின் சின்னமாக உள்ள ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி கட்சியில் படிப்படியாக வளர்ந்துள்ளனர். உழைப்பின் மூலமே தலைமை பொறுப்புக்கு வந்துள்ளனர். உழைப்பு அனுபவம் மூலம் வரும் பதவியைத்தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். 

கட்சித் தலைவரின் மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதை தருகின்றார்கள். நிர்வாகத் திறமை இல்லாதவர் ஸ்டாலின். நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது. அதனால் தான் பொங்கல் தொகுப்பில் இத்தனை குளறுபடிகள் நடந்தது. இது விடியல் அரசு அல்ல விளம்பர அரசாக உள்ளது. திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், அவர்களை எளிதில் அணுக முடியாது என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.