அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின் எனவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ஸ்டாலின் கூறுவதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நடைபெற்றது.  கூட்டம் முடிந்ததும்,ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி என அதிமுக பிரிந்ததிலிருந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும், தேவைப்பட் டால், அரசுக்கு எதிராக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரு வோம் என ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தயார் என பேட்டியளித்தார். 

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின் எனவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ஸ்டாலின் கூறுவதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார். 

மேலும் அணிகள் பிரிந்தாலும் யாரும் வேறு ஒரு கட்சியில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.