சின்னம்மா சசி மேலே ஒரு மென்மையான பார்வை: செல்லூர் ராஜூ பற்ற வைத்த புது சரவெடி!
ஆனால் அதையெல்லாம் தாண்டி ‘விரைவில் விடுதலையாகி சசி வெளியே வருவார்! அவர் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வை இணைப்பார். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் ஒரே பொதுச்செயலாளராக மீண்டும் உருவெடுப்பார்’ என்கிறார்கள் சிலர்.
சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையானது தமிழ்நாடு எல்லையிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் உள்ளது. தமிழகத்தை தன் தோழி ஜெயலலிதாவால் முறுக்கேற்றப்பட்ட அ.தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறது, அதன் முதல்வர் பதவியில் தன்னால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்திருக்கிறார். ஆனால் தான் இப்படி சிறையில் சின்னாபின்னமாய் தவிக்கிறோமே! என்பதுதான் சசியின் நீண்ட நாள் கவலை. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் சசியை அவ்வளவு சீக்கிரம் வெளியில் வர விட்டுட கூடாது! என்பதில் சில அதிகார லாபிகள் மிக தெளிவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசி சிறை நிர்வாகத்துக்கு லஞ்சம் கொடுத்து, உள்ளே சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்! என்று ஆதாரப்பூர்வமா கிளப்பிய பூகம்ப வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. அதேபோல் சசி உள்ளே இருந்தபடியே பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கினார், பணப்பரிவர்த்தனைகளை செய்தார்! என்றெல்லாம் சமீபத்தில் கிளம்பியிருக்கும் புகார்களும் இருக்கின்றன.
இவையெல்லாம், சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனை காலம் முடிந்து, வெளியே வர முயலும் சசியை முடக்கி, மீண்டும் சிறைக்குள்ளேயே வைப்பதற்கு கை கொடுக்கும் அஸ்திரங்கள்! என்கின்றனர் விபரமறிந்தோர். அதேபோல் சசிகலாவை வெளியே கொண்டு வருவதில் அவரது குடும்பத்தினருக்கே பெரிய அளவில் விருப்பமோ, ஆர்வமோ இல்லை! என்றும் ஒரு பக்கம் தகவல் தடதடக்கிறது.
ஆனால் அதையெல்லாம் தாண்டி ‘விரைவில் விடுதலையாகி சசி வெளியே வருவார்! அவர் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வை இணைப்பார். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் ஒரே பொதுச்செயலாளராக மீண்டும் உருவெடுப்பார்’ என்கிறார்கள் சிலர். இது சாத்தியமா என்று அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டதற்கு....”அதாவதுங்க, கட்சியில் இருந்து வெளியே போனவய்ங்க மறுபடியும் வந்தால் தலைமை சேர்த்துக் கொள்வது எல்லா கட்சியிலும் இயல்புதான். அம்மா ஜெயலலிதா உயிரோடு இருந்தப்பவே ரெட்ட்டை இலை சின்னத்தை முடக்க அனைத்து வேலைகளையும் பார்த்தவர் ராஜ கண்ணப்பன். ஆனால், கட்சி வலுப்பெறணும் அப்படிங்கிற எண்ணத்துல, அவர் திரும்பி வந்தப்ப அம்மா கட்சியில சேர்த்துக்கிட்டாங்க. ஆனா அவரோ இப்ப தி.மு.க.வோடு இணைந்து நிக்குறார்.
சசிகலாவை பொறுத்தவரையில் எங்களுக்கு எப்பவுமே அவர் மேலே மென்மையான ஒரு கண்ணோட்டம் தொடர்ந்துட்டே இருக்குது. அதனால் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது.” என்று சசிக்கு முழுக்க முழுக்க ஆதரவாக ஒரு புள்ளி வெச்சிருக்கிறார்.
செல்லூர் வெச்சிருக்கும் புள்ளியில் தினகரனும், சசியும் இணைந்து கோலம்போட்டு அ.தி.மு.க.வை மீண்டும் பிடிப்பார்களா?! அல்லது எடப்பாடியாரிடம் தோற்றுப் போவார்களா?
கவனிப்போம்!