கள்ளச்சாராயம் குடித்து இறக்கணும்.. குடும்பமே நினைக்கும் அளவுக்கு நிதி கொடுக்கறீங்களே நியாயமா.. செல்லூர் ராஜூ

வெள்ளம் மற்றும் சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு  2 லட்சம் 3 லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 10 லட்சம் கொடுக்கப்படுவதாக விமர்சித்த செல்லூர் ராஜூ, இந்தியாவுக்கே திமுக அரசாங்கம் முன்னோடியாக உள்ளதாக தெரிவித்தார்.

Sellur Raju has condemned the offer of Rs 10 lakh compensation in case of loss of life due to consumption of Kallacharyam.

கிணற்றில் போட்ட கல்

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு வரவேற்க்க்கூடியது.  சட்ட நுணுக்கங்கள் அறிந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களிடம் 10 முக்கிய கோரிக்கைகள் கேட்கப்பட்டது. ஆனால் இந்த திட்டமான உங்கள் தொகுதியின் முதல்வன் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளதாக தெரிவித்தார். 

Sellur Raju has condemned the offer of Rs 10 lakh compensation in case of loss of life due to consumption of Kallacharyam.

சாராயம் குடித்தால் 10 லட்சமா.?

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட கிடைக்காது என்று கூறினார்கள். தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது. கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர் இன்னும் பல உயர் ஆடிக் கொண்டிருக்கிறது. குடும்பமே சாராயம் குடித்தவர் இறக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு  2 லட்சம் 3 லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 10 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கே இந்த அரசாங்கம் முன்னோடியாக உள்ளது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கியது இல்லை. சாராயம் வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம் என தெரிவித்தார். 

Sellur Raju has condemned the offer of Rs 10 lakh compensation in case of loss of life due to consumption of Kallacharyam.

தமிழக அரசையே ஏமாற்றிய மாற்றுத்திறனாளி

ஒரு மாற்றுத்திறனாளி தமிழக அரசே ஏமாற்றி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி உள்ளூர் அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைவரையும்  ஏமாற்றி உள்ளார்கள் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.  திமுகவில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலை கடைகளில் ஆதார் அட்டைகளை வழுக்கட்டாயமாக வாங்குவதாக புகார் வந்துள்ளதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அலப்பறை செய்யும் ஆளுநர்..! விஷச்சாராய மரணத்தில் விளம்பர வெளிச்சம் தேடும் ஆர்.என் ரவி - முரசொலி கடும் விமர்சனம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios