Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையுடன் செல்பியா.?? வேறு வேலைய பாருங்க.. பாஜகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

அண்ணாமலையுடன் செல்பி என்ற நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கல்லூரி நிர்வாகங்கள் விளக்கமளித்த நிலையில் அக்கல்லூரியின் முதல்வருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Selfie program with Annamalai- BJP members argue with college principal.
Author
Palladam, First Published Jul 16, 2022, 8:56 AM IST

அண்ணாமலையுடன் செல்பி என்ற நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கல்லூரி நிர்வாகங்கள் விளக்கமளித்த நிலையில் அக்கல்லூரியின் முதல்வருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்லூரி மாணவிகளிடம் அவர்கள் பரப்புரை செய்த போது தேர்வு நேரத்தில் இது தேவையா? என மாணவிகள் முகம் சுளித்து சென்றனர், இதனால் அவர்கள் மாணவிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்திற்கு வெளியே பரபரப்பு நிலவியது. 

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அக்காட்சியின் செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அண்ணாமலை திமுக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் என ஒவ்வொருவர் மீதும் எதிராக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக வலுவான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை அவர் உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம். இது ஒருபுறம் உள்ள நிலையில் அதிக அளவில் கட்சிக்கு இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகர உத்திகளில் பாஜக களமிறங்கியுள்ளது.

Selfie program with Annamalai- BJP members argue with college principal.

இதன் ஒரு பகுதியாக வரும் 17ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜகவின் தாமரை மாநாடு நடைபெற உள்ளது, இதையொட்டி அக்காட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் 'செல்பி வித் அண்ணா'  என்ற போட்டியை நடத்த திட்டமிட்டது, அதில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவிகள் அண்ணாமலையுடன் நேரடியாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதே நேரத்தில் அவர்கள் பாஜகவில் இணைந்து  தேசபணியாற்றலாம் என்றும் கூறப்பட்டது, இதுதொடர்பாக பாஜக   சார்பில் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும்  பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி என இரண்டு கல்லூரிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும் என்றும், அங்கேயே இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் பாஜக சார்பில்  இன்விடேஷன் அடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: உண்மையிலேயே நீங்க அப்படினா.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுங்க.. ஸ்டாலினை சீண்டும் காடேஸ்வரா..!

ஆனால் பாஜகவின் இந்த விளம்பரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகங்கள்,பாஜகவின் இந்த நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தங்களிடம் அனுமதி பெறாமலேயே இதுபோல விளம்பரம் செய்து வருகின்றனர், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக தங்களது கல்லூரி பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையர் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். இது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பாஜகவினர் கல்லூரியை முற்றுகையிட்டு கல்லூரிக்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது கல்லூரி நிர்வாகம் முகப்பு கதவை முடியாதுடன், மாணவிகளின் பின்பக்க வழியாக அனுப்பிவைத்தது.

இதையும் படியுங்கள்: சாதி ரீதியாக கேள்வியின் பின்னணியில் துணைவேந்தர் ஜெகநாதன்? அம்பலப்படுத்தும் வேல்முருகன்..!

Selfie program with Annamalai- BJP members argue with college principal.

பின்னர் பாஜகவினர் பின்பக்க கதவு வழியாக சென்று கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்பக்க கதவு திறக்கப்பட்டது, அப்போது அங்கு ஏராளமானோர் பாஜகவினர் கூடினர், கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்த மாணவிகளிடம் ' செல்பி வித் அண்ணா' நிகழ்ச்சி குறித்து பிரச்சாரத்தில் செய்தனர், அப்போது அங்கு வந்த மாணவிகள் இப்போது தேர்வு நடக்கிறது, இந்த நேரத்தில் இது தேவையா என பாஜகவினரிடம் முகம் சுளித்தனர், இதனால் ஒருசில பாஜகவினர் மாணவிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர், அதுமட்டுமின்றி கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதம் செய்தனர், இதனால் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்திற்கு வெளியில் பரபரப்பு ஏற்பட்டது, அங்கு வந்த போலீசார் பாஜகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios