ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., - காங்கிரஸ் ., கூட்டணி உறுதியாகி விட்டாலும், இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே, சேலம் தொகுதியை குறிவைத்து, தொழிலதிபரும், தமிழக காங்கிரஸ்  கட்சியின் செயல் தலைவருமான, மோகன் குமாரமங்கலம், இணையதளம் மூலம் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம், மோகன் குமாரமங்கலத்துக்கு, மாநில, காங்கிரஸ் , செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, 'நான் தான் சேலம் தொகுதி, காங்கிரஸ்  வேட்பாளர்' என, நிர்வாகிகளிடம் கூறி வருவதாக தெரிகிறது.

மேலும்  50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், சேலத்தின் ஒவ்வொரு வார்டிலும் தற்போது பிரசாரத்திலும்  ஈடுபட்டு வருகிறார். இது, சேலம் தொகுதிக்கு காத்திருக்கும், காங்கிரஸ்., முன்னாள் தலைவர், தங்கபாலு மற்றும் உள்ளூர், காங்கிரஸ்  நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி முடிக்காதபோது மோகன் குமாரமங்கலம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் திமுகவினரும் கடுப்பாகியுள்ளனர்