Asianet News TamilAsianet News Tamil

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது- சேகர் பாபு பதிலடி

எத்தனை ஐடி ரெய்டு நடத்தினாலும், எத்தனை ஈடி ரெய்டு நடத்தினாலும், எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. இது திராவிட மண் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 

Sekarbabu has said that there is no chance of BJP coming to power in Tamil Nadu KAK
Author
First Published Nov 8, 2023, 11:22 AM IST | Last Updated Nov 8, 2023, 11:22 AM IST

தமிழகத்தில் பாஜக ஆட்சியா.?

தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக ஆட்சி வந்ததும், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பான பதில் அளித்தவர், திமுகவை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த நாடு . இதில் பெரியார் கொள்கை ஏற்று கொள்ளப்பட வேண்டியவை,  

இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதல் கையெழுத்து என்று சொல்பவர் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை ஐடி ரெய்டு, எத்தனை இடி ரெய்டு நடத்தினாலும் சரி, 

Sekarbabu has said that there is no chance of BJP coming to power in Tamil Nadu KAK

அண்ணாமலைக்கு வாய்ப்பு தரமாட்டார்கள்

தமிழகத்தை பொறுத்தவரை இது திராவிட மண், தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு இரும்பு மனிதராக இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையில் தான் எப்போதுமே இருக்குமே தவிர திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுகளுக்கு அசைக்க முடியாது என்றார். திமுகவின் வாக்கு வங்கி 20% அதிகரித்துள்ளது. அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றுகிற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்க மாட்டார்கள்.  

இந்து அறநிலையத்துறை மீது அண்ணாமலை குறிவைக்க காரணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்று சொல்லுவார்கள், அதனால் இந்து அறநிலையத்துறைக்கு எதிராக தொடர்ந்து பாஜக விமர்சித்து வருகின்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான 5500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துமீட்கப்பட்டுள்ளது. 1138 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது.

Sekarbabu has said that there is no chance of BJP coming to power in Tamil Nadu KAK

அறநிலையத்துறை திட்டங்கள் என்ன.?

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரேவர் கருவியின் வாயிலாக சுமார் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் நில அளவீடு செய்யப்பட்டு ஹெச்ஆர்எம்சி கல் பதிக்கப்பட்டு எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானது என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 13,000 கோயில்களுக்கு நிதியை ஒரு லட்சம் ரூபாயாக வைப்பு நிதி இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி தேவஸ்தானத்தில்  ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருந்த அரசினுடைய மானியத்தை முதலாம் ஆண்டு மூன்று கோடியாக உயர்த்தி தற்போது ஆறு கோடியாக உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு இதுவரை மானியமே இல்லாமல் இருந்தது.  அதன் கட்டுப்பாட்டுகளை ஆராய்ந்து தமிழக அரசு 290 கோயில்களுக்கு பல திருக்கோயில்களுக்கும் விளக்கேற்றுவதற்கு கூட நிதி உதவி இல்லாத இருந்த நிலையில் அந்த தேவஸ்தானத்திற்கு மூன்று கோடி ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறார்கள். முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என சேகர்பாபு பட்டியலிட்டார். 

இதையும் படியுங்கள்

கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளரை டார்ச்சர் செய்தாங்க! இதெற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை! அமைச்சர் எ.வ.வேலு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios