Asianet News TamilAsianet News Tamil

அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோவில்களை பராமரிப்பது யார்.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு

அறநிலையத் துறை செயல்பாடு குறித்து, ஆதாரத்துடன் குற்றம் சாட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார்.
 

Sekar babu has questioned who will maintain the temples if the charity department is dissolved
Author
First Published Jan 22, 2023, 9:17 AM IST

282 சிலைகள் மீட்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்  சுவாமி திருவீதி உலா வருவதற்காக 19 கிலோ எடையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பல்லக்கு வழங்கும் நிகழ்ச்சி பார்த்தசாரதி திருக்கோவிலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்லக்கை பெற்றுக் கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பல்லக்கை சுமந்து வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செந்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பின் திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டது தமிழ்நாடு காவல் துறை என தெரிவித்தார். 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

Sekar babu has questioned who will maintain the temples if the charity department is dissolved

அறநிலையத்துறையை கலைப்பதா.?

மேலும்  ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் திருப்பணிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,  பகுதி நேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாக பட்டியலிட்டார். அறநிலையத்துறையில் முறைகேடு நடப்பதாகவும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்துசமய அறநிலையத் துறையை கலைத்து முதல் கையெழுத்திடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோவில்களை பராமரிப்பது யார் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை கூறினால் பதிலளிக்கப்படும் எனவும், பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது என்றும் ஆதாரமற்ற பேச்சுக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து.! அறநிலையத்துறை கலைக்கப்படும்..! அண்ணாமலை அதிரடி

Sekar babu has questioned who will maintain the temples if the charity department is dissolved

நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை

உரிய சான்றுகளுடன் குற்றம் சாட்டினால் அதற்குரிய விளக்கங்களை அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாக கூறிய அமைச்சர், அறநிலையத்துறை வாகனத்தை, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இறையன்பர்களும், தெய்வங்களும் மகிழ்வுடன் இருக்கும் இந்த ஆட்சியை பற்றி குறை கூறுபவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இதையும் படியுங்கள்

சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! திடீரென குஜராத்திற்கு சென்ற ஓபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios