பாஜக வேட்பாளராக இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.

 

மக்களவை தேர்தலில் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் சினிமா, விளையாட்டு நட்சத்திரங்களை களத்தில் இறக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. குறைப்பாக இம்முறை பாஜக நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

தெலுங்கில் பிரபாஸ், பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களுக்கு வலைவிரித்து வருகிறது. சமீபத்தில்  மலையாள நடிகரான மோகன் லால் பாஜகவில் இணையவில்லை என திட்டவட்டமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் பாஜக வேட்பாளராக ஹரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகின. 2014ம் இதே போன்ற தகவல்கள் தத்தி தாவின.&nbs

p;

 

இது தொடர்பாக ஷேவாக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘‘2014-ம் ஆண்டு வந்த வதந்திதான் தற்போதும் உலா வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. துளியும் உண்மையில்லை. அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை’’ எனக் கூறியுள்ளார். மேலும் ஷேவாக் மக்களவைத் தேர்தலில் போட்டி என வெளியான செய்தியையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் 5 ஆண்டு சேலஞ்ச் எனவும் ஹேஷ்டாக் போட்டுள்ளார்.