நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பேராசிரியர் கல்யாண சுந்தரம் இன்று அண்ணா தி.மு.க., வில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர் கல்யாணசுந்தரம்’’என சீமான் குற்றம்சாட்டினார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறி ஆவேசப் பேட்டியளித்தார். 

கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் குமுறலாக இருந்துவந்த இந்தவிவகாரம், அண்மையில் இருதரப்பினரின் அடுத்தடுத்த பேட்டிகளால் வெடித்துச் சிதறியது. சீமானின் அதிரடி நேர்காணலை அடுத்து, `நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக' வெளிப்படையாக அறிவித்தார் கல்யாண சுந்தரம்.  இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது முதல் திமுகவில் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக உறுதியான தகவல் வெளிவந்துள்ளது