செந்தில் பாலாஜி ஒரு மணல் மாஃபியா இதை சொன்னது அவங்க தங்கை ஜோதிமணி தான், ஆனால், இவர்கள் இப்போது ஒன்றாக சேர்ந்து மணல் அள்ள மனு கொடுக்கிறார்கள் என திமுகவை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை பற்றி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் திமுகவை பற்றி செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியதில்; திமுக போராட்டமெல்லாம் பயனற்றது... இவர்கள் புடுங்குகிற அணியெல்லாம் வீண் தான், இதை நல்லா கவனிக்கணும் நீங்க, இந்த அணுக்கழிவுக்கு எதிரா ஒரு அனைத்துக்கட்சிக்கு கூட்டம் தலைமை யாரு தெரியுமா திமுக தான். இந்த அணுவுலை யாரு இவர்களுக்கு தெரியாம வரல, ஸ்டெர்லைட் யாரு இவங்களுக்கு தெரியாம வரல இப்போ தண்ணீர் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை தீரும் வரை ஓயமாட்டோம் என சொல்றாங்க, அதையே தான் நாங்களும் சொல்றோம் உங்களை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்.

 ஏனென்றால் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கணும்னா, மொதல்ல இவங்கள தீர்க்கணும் இப்போ இருக்கிற தண்ணீர் பிரச்சனை இந்த 6 மாதத்தில் தான் தொடங்கியது என்றால் உங்களைப்போல முட்டாள்கள் யாருமில்லை, இது அய்யா எடப்பாடி ஆட்சிப்பொறுப்பேற்றதால் வந்த விளைவுன்னு நீங்க நினைப்பைதைப்போல பைத்தியக்காரத்தனம் அல்ல, ஐம்பது ஆண்டுகாலமாக இவர்கள் ஆட்சி செய்ததன் விளைவுதான் இன்னிக்கு நானா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சனை.

 அவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் மாண்புமிகு அய்யா ஸ்டாலின் சொல்லட்டும், அந்த கட்சியிலிருக்கிற உடன்பிறந்தவர்கள் சொல்லட்டும் மதிப்புமிக்க தலைவர் பெருமக்கள் சொல்லட்டும், இன்னைக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு திமுக பொறுப்பில்லை என சொல்லுங்கள் பார்ப்போம், உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, 50 ஆண்டுகள் ஆட்சி செய்த உங்களுக்கு இதில், பொறுப்பில்லை என்று? என்ன பெரிய பைத்தியகாரத்தனம்? 

இவர்கள் இப்படி இரட்டை போடுவது எப்படி ஏற்றுக் கொள்வது? மாறி மாறி நீங்கள் ஆட்சி செய்து எங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டீர்கள். அத்தனை ஆற்று மணலை அள்ளி விற்றுவிட்டீர்கள். ஆந்திராவில் ஆற்று மணல் அள்ள தடை போடுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. அதே நேரத்தில் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்அருமை சகோதரர் செந்தில் பாலாஜி, தங்கை ஜோதி மணி மாவட்ட ஆட்சியரிடம் அன்பு கூர்ந்து ஆற்று மணலை அள்ள அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். 

இதே ஜோதிமணியை தோற்கடிக்க தம்பி செந்தில் பாலாஜி என்னை பேசவைத்தார். நானும் பேசினேன், அதேபோல செந்தில்பாலாஜி ஒரு மணல் மாஃபியா என்று ஜோதிமணி சொன்னார். இப்போ ரெண்டு மாஃபியாக்கள் சேர்ந்து மணல் அள்ள ஆற்று மணலை அள்ள அனுமதி கேட்குது. அதுக்கு முன்னால அள்ளிக்கொண்டு விற்றவர் கே சி பழனிச்சாமி அவரும் திமுக காரர்தான் என ஆவேசமாக பேசினார்.