குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள், பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வு ஆகாது என்றும், தற்போது நடக்கும் வன்முறை மனதுக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது தான். ஆனால் வன்முறை செய்தது யார் ? என ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? எதிர்கிறீர்களா ? என்பதை முதலில் மக்களுக்கு தெரிவியுங்கள் என்றும், அடக்குமுறை, ஒடுக்குமுறை போன்றவற்றை மீறி போராடும் மாணவர்களை ரஜினி கொச்சைப் படுத்துகிறார் எனவும் சீமான் கொந்திளித்துள்ளார்.