பாகிஸ்தான் மீது போர் தொடுக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதால் அவரது  இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளதற்கு பரபரப்பான விவாதத்தை கிளப்பி வருகிறது.

புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 49 கொல்லப்பட்ட நிலையில் அந்த நிகழ்வு இந்தியர்களின் இதயங்களை உலுக்கி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பாகிஸ்தானுக்கு கண்டக் குரல் எழுந்து வருகின்றன. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகளின் 48 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர்கட்சியை சேர்ந்த சீமான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் அவருக்கு எதிரான கட்சியினர்.

 

சீமான் முன்பு அளித்த ஒரு பேட்டியில், ’பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கோழைதனம்’ எனப் பேசிய வீடியோவை இப்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ’’சீமான், இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வேண்டும். சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.

 

இந்தப் பதிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் காயத்ரி ரகுராம் பற்றி கடுமையாக கமெண்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் தொடர்ந்து ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலளித்து குமுறிக் கொண்டிருக்கிறார் காயத்ரி.  மற்றொரு பதிவில், சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் யாரும் இதற்குப் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக எனக்கு பெயர்சொல்லாமல் மொபைலில் தொடர்பு கொள்பவர்கள் குடித்து விட்டு உளர்வதை போல பேசுகின்றனர். அவர் பேசியது பொய்யான தகவல் அல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகிறார்கள் என நினைக்கிறேன்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.  காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன. 

’’இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியராணுவத்தின் பாதுகாப்பிலேயே வாழ்ந்துகொண்டு, இந்தியஅரசின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இந்தியநாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசிகொண்டு பிரிவினைபேசிவரும் பயங்கரவாத சக்திகளுக்கு துணைபோகும் சீமான் போன்றோரைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும்’’ என ஆதரவாக பதிவிட்டுள்ளார் ஒருவர்.