கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்தச் சொல்லியதை விஜயும், சூர்யாவும் கேட்டுக்கொண்டார்கள் ரஜினியும், அஜித்தும், அதனை ஏற்க மறுத்து பாலாபிஷேகம் செய்வதை ரசிக்கிறார்கள் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருமையாக விமர்சித்துள்ளார். 

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூட்டாது எனவும் குறிப்பாக ரஜினியை கடுமையாக சாடி வரும் சீமான் இந்த முறை அஜித்தையும் வம்பிற்கு இழுத்துள்ளார். ’’சகோதரர் அஜித் விஸ்வாசம் படத்தில் தலைகவசம் போட்டு இருசக்கர வாகனம் ஓட்டுகிறார். அதை குறிப்பிட்டு எழுதுகிறார்கள். ஒரு புகழ்பெற்ற நடிகர் தலைகவசம் அணிந்து வண்டி ஓட்டுகிறார். அவரை பின்பற்றும் ரசிகர்கள் இந்த நல்ல விஷயத்தை பின் பற்றுவார் என அனைவரும் பாராட்டுகிறார்கள். அதற்காகத்தான் சகோதரர் அஜித்திடம் சொல்கிறேன்... உங்களை நிறைய இளைஞர்கள் பற்றுகிறார்கள்... நேசிக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் சொல்லணும்... 

அம்மா தமிழிசை அவர்கள் உங்களை பற்றி சொன்னவுடன் உடனடியாக மறுத்து நீங்கள் அறிக்கை வெளியிட்டீர்கள். பாராட்டு. அதைப்போலவே உங்கள் பதாகைகளுக்கு பலூற்றி அந்த சாரம் சரிந்து ஒரு இறந்து போனான். விழுந்த பிள்ளைகள் காயம்பட்டு போனார்கள். பார்த்த எல்லோரும் பதறினார்கள். நீங்கள் வலையொளியில் பார்த்து இருப்பீர்கள். நானும் பார்த்தேன். ஆட்டை அறுத்து தலையை துண்டாக வெட்டி ரத்ததை உங்கள் பதாகை மீது பீய்ச்சி அடித்த காட்சி உலகமெல்லாம் பார்த்தது. எல்லோருமே அறுவறுத்தோம். அந்த செயலை வெறுத்தோம். 

உங்களை கண்மூடித்தனமாக நம்பும் நேசிக்கும் பிள்ளைகளை வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது.  இதெல்லாம் செய்யாதீங்கனு ஒரு தடவை சொல்லுங்க. உங்களது படங்களை பார்க்கட்டும், ரசிக்கட்டும். கைதட்டட்டும். இது நாகரீகமான சமூகத்தின் பிள்ளைகளின் செயல் அல்ல. நள்ளிரவு 1 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த படத்தை பார்க்க நிறிறான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள். 4 மணிக்கு சகோதரர் அஜித் படத்தை பார்க்க போய் நிற்கிறான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.

 

உன் இனத்தின் பிரச்னை, மண்ணின் பிரச்னை உன் உரிமை பிரச்னைக்கு ஒருநாள் நீங்கள் இப்படி திரண்டு வந்திருப்பீர்களா? உஅனக்கும் சேர்த்துத் தாண்டா நாங்க நெஞ்சு வலிக்கப்போராடிக்கிட்டு இருக்கிறோம். ஒரு தடவையாவது பாலுற்றூதீர்கள் என மறுத்துச் சொல்லுங்கள் என எத்தனையோ முறை நான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோரிக்கை வைத்து பேசியிருக்கேன். அதை ரசிக்கிறார்கள் அந்த நடிகர்கள். அவரது அக்கா மகனோ. தங்கச்சி மகனோ இனம் சார்ந்த உறவோ, ரத்த உறவுகளில் ஒருவன் இப்படி பாலூற்றி கொண்டிருப்பதை ரசிப்பாரா? இவரு தலைவராகி வழிகாட்டப்போறார்..? நான் சொன்ன அறிக்கைக்காக தம்பி சூர்யாவும், விஜயும் அவர்களது ரசிகர்களுக்கு ஊத்தாதீர்கள் என கட்டளையிட்ட பின் ஒரு முறை கூட ஊற்றவில்லை’’ என அவர் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.