சாதி ஆணவ படுகொலைன்னு சொல்லாதீங்க, குடிபெருமை கொலைன்னு சொல்லுங்க என்று சீமான் பேசியதை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சாதி ஆணவ படுகொலைன்னு சொல்லாதீங்க, குடிபெருமை கொலைன்னு சொல்லுங்க என்று சீமான் பேசியதை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அது எந்த இடம் என்றாலும் சரி… என்ன விஷயம் என்றாலும் சரி.. சீமான் பேச்சை கேட்க எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருக்கும். கழுத்து நரம்பு புடைக்க, வேர்த்து விதிர்விதிர்த்து அவர் கர்ஜிக்கும் அந்த பேச்சுகளை கேட்கும் இளைஞர்கள் பட்டாளம் திமிறி எழுந்து கைதட்டும்.

சீமான் பேசுவது பொது மேடை என்றாலும் சரி, ஊடக விவாதம் ஆனாலும் சரி… அனலும் பறக்கும், ஆராவாரமும் தெறிக்கும். நரம்பு புடைக்க பேசினாலும் சரி, புஹாஹா என்று சிரித்து பேசினாலும் சரி… நாம் தமிழர் தம்பிகள் குதூகலம் ஆகிவிடுவர்.

ஆனால் தற்போது சீமான் ஒரு பேசிய விஷயம் நாம் தமிழர் தம்பிகள் இடையேயும் மட்டுமல்ல பொது வெளியிலும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. ஆணவ படுகொலையை ஆதரிக்கும் வகையில் அவர் பேசும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

"

கட்சி கூட்டத்தில் சீமான் பேசியதாவது: இது ஆணவ கொலை, சாதி ஆணவ கொலை என்பான், நான் அதை குடி பெருமை கொலை என்பேன். எனக்கு சாதி தமிழில்லை, தமிழனுக்கு சாதி இல்லை,நாங்கள் குடிகள்தான் என்று பேசி இருக்கிறார்.

அவரின் இந்த பேச்சை இணையத்தில் வைரலாக்கி பலரும் நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் கண்டித்து வருகின்றனர். ஆணவ கொலை சரி என்கிறாரே சீமான், வெளிப்படையான கொள்கை கொண் எதிரிகளை வீழ்த்தி விடலாம், இதுபோன்ற மறைமுகமான திட்டத்துடன் செயல்படும் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பாஜக, பாமக, நாதக மூன்று கட்சிகளும் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று ஒருவர் காட்டமாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இனி எவரும் சாதி "ஆணவக்கொலை"னுலாம் சொல்லக்கூடாது, அண்ணன் சொல்வதை போல "குடிப்பெருமை" கொலைனுதான் சொல்லவேண்டும், இதைவிட சிறந்தமுறையில் எவராலும் ஆணவக்கொலைகளை நியாயப்படுத்தவே முடியாது என்று வேறொருவர் கண்டித்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற பெயரில் சாதி மேலாதிக்கத்தை நிறுத்துவதே நாம் தமிழர் இயக்கத்தின் ஒரே கொள்கை என்பதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று இணையவாசி போட்டு தாக்கி உள்ளார்.

இணையத்தில் கண்டன கருத்துகள் பதிவிடப்பட்டு வரும் அதே வேளையில் #சாதிவெறியன்_சீமான் என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

இதுவரைஎந்தஇடத்திலும்ஆணவக்கொலையைகண்டித்துஒருபோராட்டம்கூடபண்ணல ஆனாநாம்தமிழர்னுமட்டும்கூப்பிடனும் என்று சீமானை போட்டு தாக்கி வருகின்றனர்.

அதெல்லாம் பத்தாது… என்று இணையத்தில் சல்லடை போட்டு எடுத்து குடிபெருமை கிடையாது என்று சீமான் பேசிய பழைய வீடியோ ஒன்றை எடுத்து போட்டும் நாதக நரகாசுரன் ரேன்ஜூக்கு கதற வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.

சமூக வலைதளங்களில் தெறித்து விழும் இந்த கருத்துகளுக்கு நாம் தமிழர் தம்பிகளும் சளைத்தவர்கள் அல்ல என்று டுவிட்டர்களில் பதில்கள் போட்டாலும் அதற்கும் மறுபதிவுகள் சளைக்காமல் வந்து கொண்டு இருக்கின்றன…!!

"