சீமான் உன் தம்பிகளை வரச் சொல்லு.. தனியா நின்று பாக்கலாம் வா.?? பாமக Ex MLA கணேஷ்குமார்.
முடிந்தால் உன் தம்பிகளை அனுப்பி வைத்து பாருங்கள் தனியாக நின்று பார்த்துவிடலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
முடிந்தால் உன் தம்பிகளை அனுப்பி வைத்து பாருங்கள் தனியாக நின்று பார்த்துவிடலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் எச்சரித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பாமகவினர் இடையூறு செய்ததாக சீமான் தொடர்ந்து பேசி வரும் நிலையில் கணேஷ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் ஆதரவு அரசியலை முன்வைத்து செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி இதுவரை தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுக-திமுகவுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜேந்திர சோழன் பெருவிழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அக்கிராமத்தில் திரண்டு ராஜேந்திரன் சோழன் பெருவிழா கொண்டாடினர். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது இரு தரப்பினர் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் தனது பேச்சை நிறுத்தினார் இதனால் சலசலப்பு ஏற்பட்டது, அதேபோல் நாம் தமிழர் கட்சியின் கொடியை பிரம்மதேசத்தில் ஏற்ற அக்கட்சியினர் முயன்றபோது அக் கிராமத்தைச் சேர்ந்த பாமகவினர் நாம் தமிழர் கட்சியை கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சீமான் வரலாற்று சம்பந்தமாக மட்டுமே பேசவேண்டும், அரசியல் தொடர்பாக பேசக்கூடாது என செய்யாறு டிஎஸ்பி செந்தில் நாம் தமிழர் கட்சிக்கு கட்டுப்பாடு விதித்தார், இதனால் அக்காட்சி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழர்களிடம் பிச்சை எடுத்து நிறுவிய NLC.. தமிழர்களை புறக்கணிப்பீங்களா.. கொதிக்கும் வேல்முருகன்..!
அதுமட்டுமின்றி அவ்வூரைச் சேர்ந்த பாமகவினர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது பறை அடிக்க கூடாது என தடுப்பதாகவும் சீமான் மேடையில் ஆதங்கம் தெரிவித்தார். தமிழ் குடிகளுக்கு இடையில் இதுபோல மோதல் ஏற்பட்டு வருவதால் தான் தமிழ்ச் சமூகம் மோசமாக நிலையில் உள்ளது என கூறினார். ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் கூட்டணிக்காக அலையும் நீங்கள் எங்களிடம் மோதி பார்க்கிறீர்கள? என காட்டமாக விமர்சித்தார், அவரைத் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் கட்சிக் கூட்டத்துக்கு இடையூறு செய்த பாமகவை மிக கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஆர்.பி.உதயகுமார்... ஆண்மகனா இருந்தா ஓபிஎஸ் வீட்டை தொட்டுப்பார்...! துள்ளி குதிக்கும் சையது கான்
இது பாமக நாம் தமிழர் இடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரம்மதேசம் கிராமத்தில் பாமக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் அவர்களின் தலைமையில் கிளைக் கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய பாமக கணேஷ் குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்தார், இவர் பேசிய விவரம் பின்வருமாறு:- அந்த நிகழ்ச்சியில் பறை அடிக்க கூடாது என பாமகவினர் தடுத்ததாக சீமான் கூறுகிறார், பாமாகவினரே பறை இசைக் குழுவை நடத்துகிறோம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பாமகவிற்கு வாக்களித்த விடக்கூடாது என்பதற்காக சீமான் இப்படி பேசுகிறார், சாதி ஒழிப்பை பற்றி பேசுகிற இவர் செயலில் என்ன செய்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக அய்யாவை விட அதிகம் என்ன செய்துவாட்டார், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் சீமான் பதில் சொல்லுங்கள், மைக் கிடைக்கிறது என்பதற்காக சீமான் எதைவேண்டுமானாலும் பேசக்கூடாது, செயலில் காண்பிக்க வேண்டும், தலித் மக்கள் பாமகவுக்கு ஒரு ஓட்டு கூட போட்டு விடக்கூடாது என்பதற்காக சீமான் இப்படி அயோக்கியத்தனமாக பேசக்கூடாது, எங்கள் கட்சியின் வலிமை என்ன என்று எங்களுக்கு தெரியும், வேண்டுமென்றால் சீமான் நீ வந்து எங்கள் கட்சியில் சேரு, தனியாக நிற்கலாம் என்று சொல்கிறாயே வந்து பார் சீமான், உனது பேச்சை எல்லாம் சினிமா பாணியில் அப்படியே வைத்துக் கொள், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியிடம் காட்ட வேண்டாம்.
முதலில் உங்களுடன் இருப்பவர்களின் வாயை அடக்குங்கள், தோலை உரிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள், பிறகு பாமகவினர் எங்காவது கைவைத்துவிட்டால் ஐயோ இவர்கள் வன்முறையாளர்கள், அடிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது, இங்கு நடந்த பிரச்சனைக்கு சென்னையில் கூட்டம் போட்டு பேசும் சீமான், நான் மட்டும் தம்பிகளிடம் சொல்லியிருந்தால் பிணமாகத்தான் போயிருப்பார்கள் என்று பேசுகிறார்,
சொல்லித்தான் பாருங்களேன் சீமான் அவர்களே, தயவுசெய்து பாமகவை திமுகவினர் என்று நினைத்துவிட்டார்கள், தைரியமிருந்தால் உன் தம்பி களை அனுப்பி பார், தூக்கிட்டு வாடா என்று சொன்னீர்களே யாரையாவது தொட்டுப்பார்க்க வேண்டியதுதானே, அப்படி தொட்டு பார்த்திருந்தால் இன்று பாமக யார் என்று தெரிந்திருக்கும் என அவர் பேசியுள்ளார்.