அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொன்ன வெற்றுச்சடங்கால் விளைந்த நன்மை யாது? என மத்திய அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’கொரரோனா நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்கொண்டது. மற்ற நாடுகளை பார்த்து அதன் வீரியத்தை உணர்ந்த தொடக்க காலக்கட்டத்திலேயே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்ய மத்திய அரசு தவறவிட்டது ஏன்?
கையுறையும், முகக்கவசமும், பாதுகாப்பு உபகரணங்களுமில்லாது நோய்த்தொற்றால் மருத்துவர்களும், செவிலியர்களும் பாதிக்கப்படும் பேராபத்து இருந்தபோது அதனை வழங்க ஏற்பாடு செய்யாது அவர்களுக்காக கைத்தட்ட சொன்னதால் வந்த பயன் என்ன?
Scroll to load tweet…
நாடு முழுமைக்கும் கோடிக்கணக்கான அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொன்ன வெற்றுச்சடங்கால் விளைந்த நன்மை யாது?’’ என மத்திய அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
