Asianet News TamilAsianet News Tamil

கைவிட்டு போகும் கரும்பு விவசாயி சின்னம்.. சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஐகோர்ட்..!

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று  டெல்லி உயர்நீதிமன்றத்தல் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. 

Seeman plea for sugarcane farmer symbol... dismissed by Delhi High Court tvk
Author
First Published Mar 5, 2024, 6:42 AM IST

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று  டெல்லி உயர்நீதிமன்றத்தல் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க: பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்கனும்.! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் -இறங்கி அடிக்கும் சீமான்

Seeman plea for sugarcane farmer symbol... dismissed by Delhi High Court tvk

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மனுததாரர் கூறும்படி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விவசாயி சின்னத்திற்கும் உங்களுக்கும் ராசியில்லை; வேறு சின்னத்தில் போட்டியிடுங்கள் - சீமானுக்கு நீதிமன்றம்

Seeman plea for sugarcane farmer symbol... dismissed by Delhi High Court tvk

ஆகையால், நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios