Asianet News TamilAsianet News Tamil

உன்னை கொலை பண்ண போறேன்... மிரட்டும் சீமான் கட்சியினர் அசராத "பாட்டில்" சின்ன வேட்பாளர்...

சீமானுக்கு நாவடக்கம் வேண்டும் என அறிக்கை விட்டேன். இதை பார்த்த சீமான் தம்பிகள் உணர்ச்சி பொங்கி என்னை கொன்றுவிடுவேன் என தமிழ்நாடு மற்றும் வெளிநாடு எண்களில் மதுக்குடிபோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவரான செல்லப்பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. 

Seeman party member murder tread for bottle candidate
Author
Chennai, First Published May 14, 2019, 10:56 AM IST

சீமானுக்கு நாவடக்கம் வேண்டும் என அறிக்கை விட்டேன். இதை பார்த்த சீமான் தம்பிகள் உணர்ச்சி பொங்கி என்னை கொன்றுவிடுவேன் என தமிழ்நாடு மற்றும் வெளிநாடு எண்களில் மதுக்குடிபோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவரான செல்லப்பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. 

தி.மு.க தலைவர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் விமர்சித்து இளம் தலைமுறையினருக்கு தவறான வழிகட்டுதல் கொடுக்கிறார் என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு மதுக்குடிபோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவரான செல்லப்பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. 

Seeman party member murder tread for bottle candidate

இந்த கொலை மிரட்டலுக்கு காரணம் சீமானின் தம்பிகள்தான் என புகார் கடிதத்தோடு மதுரை காவல்துறை ஆணையாளரை சந்தித்திருக்கிறார் செல்லபாண்டியன். அவரிடம் பேசினோம்" தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருபவர். அவரை சீமான் 'ஸ்டாலின் ஒரு அப்பனுக்கு பொறந்தா விவாததிற்கு வர சொல்லுங்க' என கலந்து கொண்ட மேடையில் பல ஆயிரம் பேர் முன்பு சொல்லியிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவரான சீமான் இன்னொரு கட்சியின் தலைவரான ஸ்டாலினை எப்படி இப்படி சொல்லலாம். 

Seeman party member murder tread for bottle candidate

சீமான் இப்படி சொல்வதன் மூலம் அவர் கட்சியில் இருக்கும் ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் சீமான் போலவை அந்த ஊரில் இருக்கும் மா.செக்களை ஒருமையில் விவாதத்திற்கு கூப்பிடுவார்கள். அதனால்தான் சீமானுக்கு நாவடக்கம் வேண்டும் என அறிக்கை விட்டேன். இதை பார்த்த சீமான் தம்பிகள் உணர்ச்சி பொங்கி என்னை கொன்றுவிடுவேன் என தமிழ்நாடு மற்றும் வெளிநாடு எண்களில் இருந்து மிரட்டுகிறார்கள். 

அதனால் நாட்டின் குடிமகன் என்ற வகையிலும், மதுரை திருப்பரங்குன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்ற முறையில் மதுரை காவல்துறை கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதத்திடம் இந்த மிரட்டல் பற்றி புகார் மனு அளித்தேன்.ஆணையாளரும் இந்த மிரட்டலுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு எனக்கு பாதுகாப்பும் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்" என கூறுகிறார். நாட்டில் ஒரு 'குடிமகனுக்கும்' பாதுகாப்பு இல்லையோ!

Follow Us:
Download App:
  • android
  • ios