Seeman supports protest against agnipath scheme : அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.

அக்னிபத் போராட்டம்

இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ராணுவத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு கூறும் நிலையில், இந்த வேலைத் திட்டத்தின் அம்சங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும். பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், ராணுவ பணியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது. இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை மாதம் முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்னிபத் போராட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் அறிவிப்பு

அதில், ‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

Scroll to load tweet…

இத்தோடு, ‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்