Seeman criticize about rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரண்டு மாதமாக அரசியலுக்கு வரார் வரார் என இதே கதையை பேசி வருகின்றனர். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் அரசியலுக்கு வந்தால் வச்சி செஞ்சி அனுப்புவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீரியஸான முகத்துடன் கலாய்த்துள்ளார்.

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்குள் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், ஆனால் சீமான், அன்புமணி ராமதாஸ், வேல் முருகன் ஆகியோர் , ரஜினிகாந்த்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர், தமிழகத்திற்கு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தேவை என தெரிவித்தார்.

நீர் நிலைகளை அழித்து விட்டு தற்போது குளம், குட்டைகளை ஸ்டாலின் தூர் வாருவது வேடிக்கையாக உள்ளது என கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக ஆட்சி பாஜ வின் கைகளுக்கு சென்றுவிட்டதாக சீமான் குற்றம்சாட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், தீபாளிவக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல, அவர் புஸ்வாணமாகி விடுவார் என்றும் சீமான் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், ரஜினிகாந்த் கடந்த இரண்டு மாதமாக அரசியலுக்கு வரார் வரார் என இதே கதையை பேசி வருகின்றனர். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் வச்சி செஞ்சி அனுப்புவோம் என சீரியஸான முகத்துடன் கலாய்த்துள்ளார்.