அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது வரி ஏய்ப்பு சம்பந்தமாகவும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்தது குறித்தும் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. 

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதைதொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றுமொரு வழக்கில் சிக்கினார். அதாவது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்களை விற்க அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. 

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் எழுவதால் பதவியை ராஜினாமா செய்து விட்டு குற்றமற்றவர் என நிரூபிக்கட்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். 

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என முத்தரசன் கூறியுள்ளார்.